Monday, August 2, 2010

காதல் கடிதம் ( ரொம்ப எதிர்பார்க்காதிங்க).......

அன்னைக்கு ஒரு நாள் நான் சும்மா தான் போயிட்டிருந்தேங்க.. காற்று பலமா வீசிச்சு (அறுத்தது போதும் விசயத்துக்கு வா).. அப்போ ஒரு கடிதம் பறந்து வந்ததுங்க... படிக்கலாமா வேணாமான்னு ஒரு கணம் யோசிச்சேன்( ஒரு கணம் தான்).. சரி வாசிச்சுதான் பாக்கலாமேன்னு வாசிச்சா(இந்த கொடுமைய எங்க போய் சொல்லுவன்) எனக்கு ரெத்த கொதிப்பே வந்திடிச்சி (அடிங்ங்ங்.... கடிதத்த படின்னா என்ன ஓவரா சீன் போர்ர).. இதாங்க அது.....அன்பே மரீஸ் (மரிக்கொழுந்தா இருக்குமோ....????????),

2 வருசமா எனக்கு காதலியா இருந்ததற்கு நன்றி தாயி. இந்த கடிதம் உன் கையில கிடைக்கிறப்போ நீ இன்னொருத்தனோட காதலியா சந்தோசமா இருப்பாய்...

நானும் யோசிச்சு பார்த்தன்.. நம்மளும் ஏன் 4ஆவது காதல் பண்ணக்கூடாதுன்னு (இதல்லாம் ஒரு பொழப்பு)... உன் பக்கத்து தெரு மேரியும் நானும் காதலிக்கிறோம். உன்கிட்ட கிடைச்ச அனுபவத்த வெச்சித்தான்.


காதல் வந்தா எல்லோரும் கடிதம் எழுத ஆரம்பிப்பாங்க (வேல வெட்டி இல்லாதவங்க). உனக்காக நான் எத்தனையோ கடிதங்கள் எழுதியிருக்கிறேன். இப்போல்லாம் கவிதையா காதல் கடிதம் எழுதுறது ரொம்ப கஷ்டமா இருக்கு மரீஸ் ( பதிவுகள திருட கூடாதுன்னு சட்டம் போட்டுட்டாங்கல்ல). அதனால உனக்கு தந்த கடிதங்கள்ள திருப்பிக் கொடுத்தன்னா அத திருத்தி என் புது காதலிக்கு கொடுப்பன் (எப்புடி இப்புடி). தயவுசெய்து கொடுத்திடு.


இன்னொரு முக்கியமான விஷயம்.. உன்கிட்ட என் போட்டோ ஒன்னு இருக்கு அதையும் திருப்பிக் கொடு. ஏன்னா அதுல மட்டும் தான் நான் கொஞ்சூன்டு அழகா இருக்கிறன் (இல்லன்னா இவரு பெரிய மன்மதன்).

இந்த 2 வருசத்தில உன்னை கவர்வதற்கு நிறை பணம் செலவு செய்திருக்கிறேன். அதன் பட்டியல்:

Lunch/ dinner: 895 Rs

Cool drinks: 2938 Rs

Snacks: 5645 Rs

Juice: 3845 Rs

Cinema: 1235 Rs

Internet chatting: 1499 Rs

Mobile: 2546 Rs

Petrol: 4255 Rs

Gift items: 7850 Rs

மொத்தம் :30 708 Rs ( பள்ளிக்கூடத்தில கூட இப்புடி கணக்கு போட்டிருக்க மாட்டானே)


இவ்வளவையும் திருப்பிக் கொடுத்தா புண்ணியமா போகும். உன்கிட்ட உள்ள பரிசுப்பொருட்கள அரை விலை போட்டு நானே வாங்கிக் கொள்றன்.

குறிப்பு: நீ எனக்காக எதுவுமே செலவு செய்யவில்லை என நினைக்கிறேன். ஏன்னா நீ எப்பவுமே உன்னுடைய பர்சை மறப்பவள் (ஆஹஹஹஹஹா).

உன்னுடைய 6வது காதல் ( இங்கயுமா) வெற்றி பெற வாழ்த்துக்கள்

இப்படிக்கு

பரமு

(மேரியின் காதலன்)இதாங்க அது. ரொம்ப பீல் பன்றிங்களோ ( அடி சண்டாளி எங்க கண்கள்ள ரத்தம் வருது) விடுங்கப்பா.. இதப்பத்தி நம்ம நேர்ல டிஸ்கஸ் பண்ணலாம் ( கறுப்பு விடாதா...?????) வரட்டுமா...“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்“

12 comments:

 1. என்னா பீலிங்க்சு!
  :)

  ReplyDelete
 2. இப்போல்லாம் பாதி பேர் இப்படி தான்ங்க......
  :)

  ReplyDelete
 3. நல்ல கற்பனை..:))
  நன்றி..

  ReplyDelete
 4. அட! அசத்திட்டீங்க!!

  ReplyDelete
 5. I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

  ReplyDelete
 6. @ கோவை குமரன்....
  @ தேவன் மாயம்...

  நன்றிங்க........

  ReplyDelete
 7. @ sweatha....
  i accept u...
  thx a lot mem....

  ReplyDelete
 8. புனைவு சிறப்பாக இருந்தது... தொடர்ந்து எழுதுங்கள்...

  ReplyDelete
 9. Hi

  அந்த கணக்கு ரொம்ப நல்லா இருக்கு

  அதும் அந்த பாதி விலை ரொம்ப நல்லா இருக்கு

  then,

  அபாரம் உங்க கவிதை

  தமிழ் அழகா இருக்கு

  அருமையான கவிதை

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. @ prabhakaran.....
  ///புனைவு சிறப்பாக இருந்தது... தொடர்ந்து எழுதுங்கள்... ///

  உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.....

  ReplyDelete
 11. @ வேங்கை.....
  /// Hi

  அந்த கணக்கு ரொம்ப நல்லா இருக்கு

  அதும் அந்த பாதி விலை ரொம்ப நல்லா இருக்கு

  then,

  அபாரம் உங்க கவிதை

  தமிழ் அழகா இருக்கு

  அருமையான கவிதை

  வாழ்த்துக்கள்///

  ரொம்ப நன்றிங்க...

  ReplyDelete