Tuesday, November 16, 2010

ரோஜாவும் அர்த்தமும்......!!!!!!!!!!!இன்றைய உலகில் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்குமிடையில் அன்பை பரிமாறிக் கொள்ள முதலிடம் வகிப்பது ரோஜாப்பூவே,

இவ் ரோஜாப்பூக்கள் பற்பல நிறங்களில் காணப்படுவது அதிசயமே தான்.

ஒவ்வொரு நிற ரோஜாப்பூவும் என்ன அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றது என்பதை சற்று விரிவாக நோக்கினால்......,

*சிவப்பு ரோஜாக்கள் அன்பையும், காதலையும் வெளிப்படுத்தும். மரியாதை மற்றும் பேரார்வத்தை வெளிப்படுத்தவும் இந்த ரோஜாக்கள் உதவும். ஆழ்மனதில் இருக்கும் அழகையும் பிரகாசிக்கச் செய்யும் வல்லமை சிவப்பு ரோஜாக்களுக்கு உண்டு.

*இளஞ்சிவப்பு ரோஜாவை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வழங்கலாம். பாராட்டுவதற்கும், வாழ்த்து கூறவும், நட்பு பாராட்டுவதற்கும் ஏற்றது `பிங்க்` ரோஜா.

* மெலிதான இளம்சிவப்பு ரோஜாக்கள் அழகை வெளிப்படுத்தக் கூடியது. கருணை, மகிழ்ச்சி, ஆளுமைத்திறனை வெளிப்படுத்த சிறந்தது இந்த ரோஜாக்கள்.

* அடர்ந்த `பிங்க்' நிற ரோஜா நன்றி தெரிவிக்க கொடுக்கப்பட வேண்டியது.

* இளம்நீல நிற ரோஜா, முதல் பார்வையில் இதயத்தை கொள்ளை கொண்டவருக்கு கொடுக்கப்பட்டால் அவரது அன்பை மேலும் பெருக்கித்தரும்.

* வெள்ளை ரோஜா உயிரில் கலந்த தூய காதலை வெளிப்படுத்த வழங்கப்படுவதாகும். திருமணம் நிச்சயமான சமயத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு கொடுக்கலாம். பயபக்தி, பணிவைக் காட்டவும் வெள்ளை ரோஜா பொருத்தமானது. குற்றமற்றவன் என்பதைச் சொல்லவும் வெள்ளை ரோஜா ஏற்றது.

* நட்பு, மகிழ்ச்சி, பெருமிதம், சுதந்திரம் போன்றவற்றில் உங்களுக்கு இருக்கும் அக்க றையை வெளிக்காட்ட மஞ்சள் ரோஜா பொருத்த மானது.

* பவள நிற ரோஜா உங்கள் விருப்பங்களை உங்களால் விரும்பப்படுகிறவர்களுக்கு உணர்த்த ஏற்றது.

* இளஞ்சிவப்பும், வெண்மையும் கலந்த `பீச்' நிற ரோஜா தன்னடக்கத்தை காட்டும்.

* ஆரஞ்சு நிற ரோஜாவை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் வழங்கலாம். கவர்ச்சியாய் தோன்ற விரும்புபவர்களும் இந்நிற ரோஜாவை சூடிக் கொள்ளலாம்.

* சிவப்பு மற்றும் மஞ்சள் ரோஜாக்களை பாராட்டுத் தெரிவிக்க வழங்கலாம்.

* மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ரோஜாக்களை இணைத்து கொடுப்பது எண்ணங்களை ஈர்த்து மனதை உருக வைக்கும்.

* எளிய காதல் தூதுவன் ரோஜாப் பூக்கள்தான். ஒற்றை ரோஜா உறுதியான காதலைச் சொல்லும். இரட்டை ரோஜா அல்லது இரட்டை நிறம் கலந்த ரோஜா, என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என்று கேட்கும் பொருளில் கொடுப்ப தாகும். இனிய அழைப்புகளுக்கும் இரட்டை ரோஜா வழங்கலாம்.

* வெளிர்நிற ரோஜாக்கள் எல்லாம் நட்பை வெளிப்படுத்துவன. 12 ரோஜாக்கள் சேர்ந்த மலர்ச்செண்டு (பொக்கே) நன்றி தெரிவிக்கவும், 25 ரோஜாக்களின் இணைப்பு வாழ்த்துச் சொல்ல வும், 50 ரோஜாக்கள் சேர்ந்தது நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தவும் ஏற்றது.

* மலர்ந்திருக்கும் நேரங்களில் மனிதர்களை மகிழச் செய்யும் பண்பு மலர்களுக்கே உரியது. அன்பையும், காதலையும் இதமாகச் சொல்லும் ரோஜாக்களை உங்கள் இதயம் கவர்ந்தவர்களுக்கு கொடுங்கள்.........!!!!!!!!!!!!

Wednesday, November 3, 2010

காதல் ஒரு போதை.....
காதல் ஒரு போதை என்று சில கவிஞர்களும் காதலை எதிர்ப்பவர்களும் கூறியிருக்கின்றனர். ஆனால், இப்போது விஞ்ஞானிகளும் அதையே கூறுகின்றனர்.

காதலில் விழுவது, கொக்கேய்ன் போதைப் பொருள் ஏற்படுத்துவதற்கு சமனான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என காதல் தொடர்பாக மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்த அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வின்படி, பார்த்தவுடனே காதல் என்பது சாத்தியமாம். மனிதர்கள் தாங்கள் காதல் கொண்டவர்களைக் கண்ணால் காணும்போது மூளையில் 12 இடங்களில் தூண்டல்கள் இடம்பெறுகின்றனவாம்.

இந்நிகழ்வின்போது 'திடீரென சிறப்பாக உணரச்செய்யும்' டோபைன், ஒக்ஸிடோஸின், அட்ரனலின் போன்ற இரசாயணங்களை உடலில் சுரக்கச் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கொகேயின் போதைப் பொருளினாலும் இந்த இரசாயணங்கள் த}ண்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆய்வு முடிவுகள் மூலம் காதலுக்கு விஞ்ஞான அடிப்படை உள்ளது என்பது உறுதிப்படுத்துகின்றன என்கிறார் தலைமை ஆய்வாளரான பேராசிரியர் ஸ்டெபானி ஓர்டிக். அவர் நியூயோர்க் சிராகஸ் பல்கலைக்கழக பேராசிரியர்.

பேராசிரியர் ஓர்டிக்கும் அவரின் குழுவினரும் மேற்கு வேர்ஜீனியா பல்கலைக்கழகம், மற்றும் சுவிட்ஸர்லாந்திலுள்ள பல்கலைக்கழக வைத்தியசாலை ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்களுடன் இணைந்து மேற்படி ஆய்வை மேற்கொண்டனர்.

இக்கண்டுபிடிப்புகளின் மூலம் நரம்பியல் விஞ்ஞானத்திலும் உளவியல் மருத்துவத்திலும் பாரிய மாற்றங்கள் ஏற்படலாம் என ஸ்டெபானி ஓர்டிக் கூறுகிறார்.

சரி, காதலில் விழுவது இதயமா அல்லது மூளையா என்ற பெரிய கேள்விக்கு என்ன பதில்?

'அது மூளையென்றுதான் நான் கூறுவேன். ஆனால் இதயத்திற்கும் தொடர்புள்ளது. உதாரணமாக, மூளையின் சில பகுதிகள் செயற்படும்போது இதயத்தில் தூண்டுதல்களை ஏற்பட முடியும். வயிற்றில் வண்ணத்துப்பூச்சி பறக்கும்' என்கிறார் பேராசிரியர் ஓர்டிக்.


Friday, October 15, 2010

முதல் முத்தம்......!!!!!சலசலக்கும் ஓடை..
ஜில்லென்ற காற்று..
தூரத்து வானம்..
பெளர்ணமி நிலவு..
அந்தி மழை..
அந்த நேரத் தேனீர்..
காலைத்தூக்கம்..
கனவின் மயக்கம்..
விடியலின் குளிர்மை..
விண்மீனின் கண் சிமிட்டல்..
இனிமையான ரீங்காரம்..
இரவு நேர மெல்லிசை..
பரந்த புல்வெளி..
இலை மேல் பனித்துளி..
மெழுகுவர்த்தி இரவு..
தென்னங்கீற்று சங்கீதம்..
ரயிலின் ஜன்னலோரம்..
துள்ளித்திரியும் மான் குட்டி..
இவையொன்றும் ரசிக்கவில்லை- உன்
ஒற்றை முத்தத்தை போல் ....!!!!!!!

Monday, August 2, 2010

காதல் கடிதம் ( ரொம்ப எதிர்பார்க்காதிங்க).......

அன்னைக்கு ஒரு நாள் நான் சும்மா தான் போயிட்டிருந்தேங்க.. காற்று பலமா வீசிச்சு (அறுத்தது போதும் விசயத்துக்கு வா).. அப்போ ஒரு கடிதம் பறந்து வந்ததுங்க... படிக்கலாமா வேணாமான்னு ஒரு கணம் யோசிச்சேன்( ஒரு கணம் தான்).. சரி வாசிச்சுதான் பாக்கலாமேன்னு வாசிச்சா(இந்த கொடுமைய எங்க போய் சொல்லுவன்) எனக்கு ரெத்த கொதிப்பே வந்திடிச்சி (அடிங்ங்ங்.... கடிதத்த படின்னா என்ன ஓவரா சீன் போர்ர).. இதாங்க அது.....அன்பே மரீஸ் (மரிக்கொழுந்தா இருக்குமோ....????????),

2 வருசமா எனக்கு காதலியா இருந்ததற்கு நன்றி தாயி. இந்த கடிதம் உன் கையில கிடைக்கிறப்போ நீ இன்னொருத்தனோட காதலியா சந்தோசமா இருப்பாய்...

நானும் யோசிச்சு பார்த்தன்.. நம்மளும் ஏன் 4ஆவது காதல் பண்ணக்கூடாதுன்னு (இதல்லாம் ஒரு பொழப்பு)... உன் பக்கத்து தெரு மேரியும் நானும் காதலிக்கிறோம். உன்கிட்ட கிடைச்ச அனுபவத்த வெச்சித்தான்.


காதல் வந்தா எல்லோரும் கடிதம் எழுத ஆரம்பிப்பாங்க (வேல வெட்டி இல்லாதவங்க). உனக்காக நான் எத்தனையோ கடிதங்கள் எழுதியிருக்கிறேன். இப்போல்லாம் கவிதையா காதல் கடிதம் எழுதுறது ரொம்ப கஷ்டமா இருக்கு மரீஸ் ( பதிவுகள திருட கூடாதுன்னு சட்டம் போட்டுட்டாங்கல்ல). அதனால உனக்கு தந்த கடிதங்கள்ள திருப்பிக் கொடுத்தன்னா அத திருத்தி என் புது காதலிக்கு கொடுப்பன் (எப்புடி இப்புடி). தயவுசெய்து கொடுத்திடு.


இன்னொரு முக்கியமான விஷயம்.. உன்கிட்ட என் போட்டோ ஒன்னு இருக்கு அதையும் திருப்பிக் கொடு. ஏன்னா அதுல மட்டும் தான் நான் கொஞ்சூன்டு அழகா இருக்கிறன் (இல்லன்னா இவரு பெரிய மன்மதன்).

இந்த 2 வருசத்தில உன்னை கவர்வதற்கு நிறை பணம் செலவு செய்திருக்கிறேன். அதன் பட்டியல்:

Lunch/ dinner: 895 Rs

Cool drinks: 2938 Rs

Snacks: 5645 Rs

Juice: 3845 Rs

Cinema: 1235 Rs

Internet chatting: 1499 Rs

Mobile: 2546 Rs

Petrol: 4255 Rs

Gift items: 7850 Rs

மொத்தம் :30 708 Rs ( பள்ளிக்கூடத்தில கூட இப்புடி கணக்கு போட்டிருக்க மாட்டானே)


இவ்வளவையும் திருப்பிக் கொடுத்தா புண்ணியமா போகும். உன்கிட்ட உள்ள பரிசுப்பொருட்கள அரை விலை போட்டு நானே வாங்கிக் கொள்றன்.

குறிப்பு: நீ எனக்காக எதுவுமே செலவு செய்யவில்லை என நினைக்கிறேன். ஏன்னா நீ எப்பவுமே உன்னுடைய பர்சை மறப்பவள் (ஆஹஹஹஹஹா).

உன்னுடைய 6வது காதல் ( இங்கயுமா) வெற்றி பெற வாழ்த்துக்கள்

இப்படிக்கு

பரமு

(மேரியின் காதலன்)இதாங்க அது. ரொம்ப பீல் பன்றிங்களோ ( அடி சண்டாளி எங்க கண்கள்ள ரத்தம் வருது) விடுங்கப்பா.. இதப்பத்தி நம்ம நேர்ல டிஸ்கஸ் பண்ணலாம் ( கறுப்பு விடாதா...?????) வரட்டுமா...“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்“

Saturday, July 31, 2010

எரியும் இதயம்.....!!!!!!!!!பத்திரண்டு வருடங்கள்
பத்திரமாய் காத்த
பதுமையான என் இதயத்தை
பத்தே நொடிகளில்
உனக்குள் இடம்மாற்றியவன்
நீ........

பவித்திரமாய் உள்ளிருந்த
பாசம் முழுவதையும்
பதமாய் உனக்களித்த
பேதை நான்........

பத்திரப்படுத்த தெரியாமல்
உடைத்துவிட்டாய் - என்
கண்ணாடி இதயத்தை...
உன் சுயத்துக்காக
என் சுயத்தை கொன்றுவிட்டாய்.....

இத்தனையும் தெரிந்தும்
சிதறிய இதய சில்லுகள் ஒவ்வொன்றிலும்
உன் புன்னகை முகம் தெரிவதுதான்
வேடிக்கை........

என்
கண்கள் வடிக்கும்
கண்ணீர் துளிகள் நிலத்தில் விழும்
வரிவடிவம் - உன்னுருவம்.....

காதல் இல்லையென்றாலும்
இப்போதும் நாம் காதலர்களாம்....
வேடிக்கையாயில்லை...
என்னையறியாமலேயே எனைப்பார்த்து
கேலியாய் சிரிக்கிறது
என் இதயம்
எரியும் என் இதயம்..........!!!!!!!!!!!!

Friday, July 23, 2010

நீயில்லாத என் தனிமை....!!!!!!!நான் வாழ்ந்த
இரண்டாம் கருவறை - நீ...
தாயின் கருவறையிலிருந்து
பிரியும் போது வெட்டுப்பட்ட
தொப்புழ் கொடியின் வலியை விட
உன்னிலிருந்து நீங்கும் போதான வலி
ரணமானது.....

கனவுகளை சுமந்திருந்த - என்
கண்கள் இப்போது
கண்ணீரை சுமக்கிறது....

உன் உறவு - என்
உடைமை என்றிருந்த எனக்கு
உன் பெயர் சொல்லக்கூட
உரிமை இல்லையாம்....

எத்தனை காதலர்களை கண்டிருக்கும்
இவ்வுலகம்....
எத்தனை காதல்களை இழந்திருக்கும்
இவ்வுலகம்....
காலத்தின் சுவடுகளில் - நம்
பாதங்களும் பதிந்திருக்கும்...
அதிலாவது நிலைத்திருப்போம்
நாமும்....
நம் காதலும்.......

உன் தனிமைக்கு - நான்
துணை என்றாய்....
இப்போது - நீ
இல்லாததால் - நான்
தனிக்கிறேன்...
கொல்கிறது நீயில்லாத
என் தனிமை.......!!!!!!!!

Saturday, July 17, 2010

வாழ்வு என்றால் என்ன...?????????


வாழ்வுக்கு அர்த்தம் சொல்லுங்கள்
வாழ்ந்து பார்க்கிறேன் - நானும்...

வாழ்வு என்றால் உண்மை - ஆனால்
பொய்மை நிறைந்த உண்மை...

வாழ்வு என்றால் விடுகதை - ஆனால்
விடைதெரியா விடுகதை....

வாழ்வு என்றால் விருட்சம் - ஆனால்
விதைகள் இல்லா விருட்சம்....

வாழ்வு என்றால் வசந்தம் - ஆனால்
வாசம் இல்லா வசந்தம்....

வாழ்வு என்றால் சுவாசம் - ஆனால்
மூர்ச்சையில்லா சுவாசம்....

வாழ்வு என்றால் என்ன...?????????

வாழ்வுக்கு அர்த்தம் சொல்லுங்கள்
வாழ்ந்து பார்க்கிறேன் - நானும்...!!!!!!!!

Thursday, July 15, 2010

காதலின் ரணம்......


உனக்குத் திருமணமாம்
யார் யாரோ சொல்கிறார்கள்....
தயாராக வேண்டிய - நீ
இல்லாமலேயே தயாராகிக் கொண்டிருக்கின்றது
உளக்கான எதிர்பார்ப்புக்கள்....

நேசம் வைத்த நெஞ்சை
நிராகரித்துவிட்டு
துடிக்கத்துடிக்க கொன்றுவிட்டு
எந்த மனதோடு
மணக்கோலம் பூணப்போகிறாய்.....???????

ஏமாற்றங்கள் நிரம்பி வழியும்
வாழ்வு எனத்தெரிந்தும்
அதன் வழியே நீண்டு கொண்டிருக்கிறது - என் பார்வை
உன்னை தேடியபடி...

நீ
கானல் எனத் தெரிந்தும் உன் மேல்
கடலளவு நேசம் வைத்திருக்கிறது இன்னும்
என் நெஞ்சம்....

ஆயிரம் பேர்
ஆறுதல் சொல்லியும்
ஆறவில்லை - உன்னால்
எனக்களிக்கப்பட்ட காயம்.....
அதன் மீது மேலும் மேலும்
காயங்களை திணிக்கிறாய்....
வலித்தாலும் தாங்கிக் கொள்கிறேன்
உன் காயங்களை தாங்கி பழக்கப்பட்டு விட்டது
என் உடலும் மனதும்......

எனக்குள் இருக்கிறது
உன் மீது அளவுகடந்த
கோபம்....
அதே எனக்குள் இருக்கிறது
உன் மீது அதையும் கடந்த
காதல்............!!!!!!!!!!

Wednesday, July 14, 2010

நினைவுகளில் நிறந்த வலி....நம் காதல் தருணந்களை
மீண்டுமொரு முறை மீட்டிப்பார்க்கிறேன்....

நம் முகங்களில்
அழகான புன்னகை மட்டுமே நிரம்பி வழிந்த
நாட்கள் அவை....
எப்போதும் நம் மனங்களில்
பட்டாம்பூச்சியொன்று வண்ண சிறகடித்து
பறந்துகொண்டே இருக்கும்....

பச்சை புல்வெளியில்
பசுமை நீரோடை சலசலத்தோடும்
பரவசம் எப்போதும் எம்முள்...
அன்னப்பறவை ஒன்று
அழகாய் நடைபோடும்
அமைதியான பாதை நம் பார்வைகள்....
ஆயிரம் வார்த்தைகளையும்
ஜாடையால் காட்டும்
கனவுகளால் நிறைந்தவை நம் கண்கள்......................

உன்னை நீங்கிய பின்னரான இந்நாட்களில்....

சோகத்தை தவிர
வேறெந்த உணர்வையும்
காணமுடிவதில்லை நம் முகங்களில்....
தட்டானின் சிறகுகளை
வலுக்கட்டாயமாக பிய்த்தெறிந்த
வலி நம் மனங்களில்....

பசுமையே இல்லாது
வரட்சியாகிப் போன நம் கால் தடங்கள்....
கனவுகள் கலைத்து
கண்ணீர் மட்டுமே குடியேறிய நம் கண்கள்....

செத்துக்கொண்டே வாழும் பாக்கியம்
யாருக்குக் கிடைக்கும்
நம்மை தவிர.......