
நம் காதல் தருணந்களை
மீண்டுமொரு முறை மீட்டிப்பார்க்கிறேன்....
நம் முகங்களில்
அழகான புன்னகை மட்டுமே நிரம்பி வழிந்த
நாட்கள் அவை....
எப்போதும் நம் மனங்களில்
பட்டாம்பூச்சியொன்று வண்ண சிறகடித்து
பறந்துகொண்டே இருக்கும்....
பச்சை புல்வெளியில்
பசுமை நீரோடை சலசலத்தோடும்
பரவசம் எப்போதும் எம்முள்...
அன்னப்பறவை ஒன்று
அழகாய் நடைபோடும்
அமைதியான பாதை நம் பார்வைகள்....
ஆயிரம் வார்த்தைகளையும்
ஜாடையால் காட்டும்
கனவுகளால் நிறைந்தவை நம் கண்கள்......................
உன்னை நீங்கிய பின்னரான இந்நாட்களில்....
சோகத்தை தவிர
வேறெந்த உணர்வையும்
காணமுடிவதில்லை நம் முகங்களில்....
தட்டானின் சிறகுகளை
வலுக்கட்டாயமாக பிய்த்தெறிந்த
வலி நம் மனங்களில்....
பசுமையே இல்லாது
வரட்சியாகிப் போன நம் கால் தடங்கள்....
கனவுகள் கலைத்து
கண்ணீர் மட்டுமே குடியேறிய நம் கண்கள்....
செத்துக்கொண்டே வாழும் பாக்கியம்
யாருக்குக் கிடைக்கும்
நம்மை தவிர.......
///செத்துக்கொண்டே வாழும் பாக்கியம்
ReplyDeleteயாருக்குக் கிடைக்கும்
நம்மை தவிர....... ///
அருமையான வரிகள். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
தருமி....
ReplyDelete”நன்றிகள் பல....”
கவிதை வாசித்தால்,கண்ணீர் இமைவழியில் வழிகிறதே
ReplyDelete@ goma....
ReplyDeleteஉணர்வுகளின் உக்கிரம் அல்லவா....
என்னமாதிரி, இப்போதான் பதிவி போட ஆரம்பீச்சிருக்ககிர , எல் போர்ட தெரிஞ்சாலும், எழுத்துல ரொம்ப முதிர்ச்சி இருக்கு அம்மனி. நல்ல எழுதுங்க. வாழ்த்துக்கள்.
ReplyDelete@ jay
ReplyDeleteரொம்ப நன்றிங்க.....
//செத்துக்கொண்டே வாழும் பாக்கியம்
ReplyDeleteயாருக்குக் கிடைக்கும்
நம்மை தவிர....... //
கொன்னுட்டீங்க...அருமை..
@ கோவை குமரன்...
ReplyDeleteநன்றி...
நம் காதல் தருணந்களை-தருணங்களை
ReplyDeleteவரட்சியாகிப் போன நம் கால் தடங்கள்....-வறட்சியாகிப்போன -சின்னப்பிழைகள்தாம்.முயன்று களையவும்.
செத்துக்கொண்டே வாழும் பாக்கியம்
யாருக்குக் கிடைக்கும்
டச்சிங் லைன்.இறந்துகொண்டே அல்லது உயிர்நீத்துக்கொண்டே ,மரணித்துக்கொண்டே எனில் இன்னும் நல்லா இருக்கும் என நினைக்கிறேன்
@ செந்தில்குமார்...
ReplyDelete/// நம் காதல் தருணந்களை-தருணங்களை
வரட்சியாகிப் போன நம் கால் தடங்கள்....-வறட்சியாகிப்போன -சின்னப்பிழைகள்தாம்.முயன்று களையவும்.
செத்துக்கொண்டே வாழும் பாக்கியம்
யாருக்குக் கிடைக்கும்
டச்சிங் லைன்.இறந்துகொண்டே அல்லது உயிர்நீத்துக்கொண்டே ,மரணித்துக்கொண்டே எனில் இன்னும் நல்லா இருக்கும் என நினைக்கிறேன்///
நன்றிங்க....
இறந்துகொண்டே அல்லது உயிர்நீத்துக்கொண்டே ,மரணித்துக்கொண்டே என்ற வசனங்கள் நன்றாக இருக்கும்... ஆனால்.. சொல்லவந்ததின் வீரியம் அதில் தெரியாது என நினைக்கிறேன்.... நன்றிங்க....
You have a good talent Sri Priai to write Kavithai's in Tamil.
ReplyDelete