
காலை வேளை...
பனிமுகிற் கூட்டம்...
கதிரவன் விழிக்குமுன்னே
கண் விழித்துக்கொண்டேன் - நான்....
பக்கத்தில் அவன்
ஆழ்ந்த உறக்கத்தில்......!!!!
நெற்றிச்சுருக்கம் குறைந்து...
உதடுகளின் இறுக்கம் தளர்ந்து...
அன்றே பிறந்த குழந்தையின் சாயலில்.....
முன்னிரவின்
ஊடலின் பின்னான கூடலில்
களைத்துப் போனானோ....????
நினைக்கும் போதே
றோஜாக்கள் எட்டிப்பார்த்தன
என்னிரு கன்னங்களில்.....
அவனை முத்தமிட நகர்ந்தன - என்
இதழ்கள்....
சற்றே நெருங்கி
அவன் நெற்றியில் மெதுவாய்
பட்டிதழ் பதித்தேன்...
அசைவில்லை அவனிடம்..
என் ஸ்பரிசம் உணரவில்லையோ....?????
கன்னத்தில் ஒன்று
நுனி மூக்கில் ஒன்று
காது மடலில் ஒன்று
எதற்கும் அசைவில்லை அவனிடம்...
கொஞ்சம் கோபம்...
நிறைந்த நேசம்...
அவன் மீது....
ஒரு நொடி....
சிரிப்பின் சாயல் அவனிதழில்...!!!!
பொய்யோவென எண்ணும் போதே
பொய்யாகிப்போனது...
அவனிதழ் நோக்கி
மெதுவாக நகர்ந்தன - என்னிதழ்கள்...
சற்றும் எதிர்பாராமல் ஒரு
ஸ்பரிசம்....!!!
அவன் கை வளையத்துக்குள் - நான்...
திகைத்தேன்...
திணறினேன்...
முகம் பார்த்தேன்
அதே குறுஞ்சிரிப்பு...!!!
அவன் என்
செல்ல நடிகனென்பதை
எப்படி மறந்தேன்...??????
வெட்கிச் சிவந்தன கன்னங்கள்...
சிலிர்த்தெழுந்தன் உரோமங்கள்...
மெதுவாய் அவனிரு கைகளுக்குள்
குடி கொண்டேன்...
அவன் மார்புக் கூட்டுக்குள்
நடை பயின்றேன்...!!!!
கிழக்கில் எழுந்தான் கதிரவன்....
”இன்னும்” எனும் சிணுங்கலில்
என்னவன்...!!!
வெளியே பனிமழையின் நிறுத்தம்...
உள்ளே முத்தமழையின் தொடக்கம்....
ஆஹா......!!!!!!
இனி....
கதிரவனும் வேண்டாம்...
காரிருளும் வேண்டாம்.....!!!!!!!