
உனக்குத் திருமணமாம்
யார் யாரோ சொல்கிறார்கள்....
தயாராக வேண்டிய - நீ
இல்லாமலேயே தயாராகிக் கொண்டிருக்கின்றது
உளக்கான எதிர்பார்ப்புக்கள்....
நேசம் வைத்த நெஞ்சை
நிராகரித்துவிட்டு
துடிக்கத்துடிக்க கொன்றுவிட்டு
எந்த மனதோடு
மணக்கோலம் பூணப்போகிறாய்.....???????
ஏமாற்றங்கள் நிரம்பி வழியும்
வாழ்வு எனத்தெரிந்தும்
அதன் வழியே நீண்டு கொண்டிருக்கிறது - என் பார்வை
உன்னை தேடியபடி...
நீ
கானல் எனத் தெரிந்தும் உன் மேல்
கடலளவு நேசம் வைத்திருக்கிறது இன்னும்
என் நெஞ்சம்....
ஆயிரம் பேர்
ஆறுதல் சொல்லியும்
ஆறவில்லை - உன்னால்
எனக்களிக்கப்பட்ட காயம்.....
அதன் மீது மேலும் மேலும்
காயங்களை திணிக்கிறாய்....
வலித்தாலும் தாங்கிக் கொள்கிறேன்
உன் காயங்களை தாங்கி பழக்கப்பட்டு விட்டது
என் உடலும் மனதும்......
எனக்குள் இருக்கிறது
உன் மீது அளவுகடந்த
கோபம்....
அதே எனக்குள் இருக்கிறது
உன் மீது அதையும் கடந்த
காதல்............!!!!!!!!!!
அருமை ....
ReplyDelete(ஓட்டுப்பட்டையை இணைத்துவிடுங்கள் ஸ்ரீபிரியை. அப்படியே இந்த "Word Verification" யும் தூக்கிட்டா புண்ணியமா போவும்)
awesome supera irukku vaazhthukkal thozhi
ReplyDelete@ தருமி..
ReplyDeleteநன்றி..... அப்படியே செய்கிறேன்....
@ gayathri....
நன்றி தோழி.....
கவிதை மிக அதிக வலியை தாங்கி நகர்கிறது.
ReplyDeleteகவிதைக்கு பாராட்டுக்கள்
@ கருணாகரசு..
ReplyDeleteநன்றி...
என்ன மாதிரி ஆளுகளுக்கும் , புரியிரா மாதிரிதான் கவுஜ எழுதியிருக்கீக. அனுபவப்பட்டு எழுதினாமாதிரி இருக்கு. நல்லாருக்கு நன்றி.
ReplyDeleteநல்லா இருக்குங்க , அருமை
ReplyDelete@ jey...
ReplyDeleteஉங்களுக்கு புரிஞ்சிடுச்சு தானே... அப்போ வெற்றிதான்..... நன்றிங்க....
@ மங்குனி...
ரொம்ப நன்றிங்க....
தயாராக வேண்டிய - நீ
ReplyDeleteஇல்லாமலேயே தயாராகிக் கொண்டிருக்கின்றது
உளக்கான எதிர்பார்ப்புக்கள்....
இங்கே உனக்கான என வரவேண்டும்.இந்தக்கவிதையிலேயே எனக்குப்பிடித்த லைன் இது.
@ செந்தில்குமார்....
ReplyDelete///தயாராக வேண்டிய - நீ
இல்லாமலேயே தயாராகிக் கொண்டிருக்கின்றது
உளக்கான எதிர்பார்ப்புக்கள்....
இங்கே உனக்கான என வரவேண்டும்.இந்தக்கவிதையிலேயே எனக்குப்பிடித்த லைன் இது.////
திருத்திக்கொள்கிறேன்.. நன்றிங்க....