Saturday, July 17, 2010

வாழ்வு என்றால் என்ன...?????????


வாழ்வுக்கு அர்த்தம் சொல்லுங்கள்
வாழ்ந்து பார்க்கிறேன் - நானும்...

வாழ்வு என்றால் உண்மை - ஆனால்
பொய்மை நிறைந்த உண்மை...

வாழ்வு என்றால் விடுகதை - ஆனால்
விடைதெரியா விடுகதை....

வாழ்வு என்றால் விருட்சம் - ஆனால்
விதைகள் இல்லா விருட்சம்....

வாழ்வு என்றால் வசந்தம் - ஆனால்
வாசம் இல்லா வசந்தம்....

வாழ்வு என்றால் சுவாசம் - ஆனால்
மூர்ச்சையில்லா சுவாசம்....

வாழ்வு என்றால் என்ன...?????????

வாழ்வுக்கு அர்த்தம் சொல்லுங்கள்
வாழ்ந்து பார்க்கிறேன் - நானும்...!!!!!!!!

20 comments:

  1. சூப்பர்..

    தொடர்ச்சியா கலக்குங்க

    ReplyDelete
  2. ரொம்ப நல்லாயிருக்கு..
    அப்புறம்.., ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அர்த்தம்..

    ReplyDelete
  3. //வாழ்வு என்றால் என்ன...?????????//

    பலருக்கு
    உண்மையான விருட்சத்தின் விடுகதை...
    சிலருக்கு
    வசந்தத்தின் வழி சுவாசம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு...

    ReplyDelete
  5. @ rk guru & வெறும்பய...
    வருகைக்கு நன்றிகள்...

    @ பிரசன்னா....
    //ரொம்ப நல்லாயிருக்கு..
    அப்புறம்.., ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அர்த்தம்.//

    நன்றிங்க... அதுதாங்க ஏன்னு புரியாம இருக்கு....

    ReplyDelete
  6. @ கோவை குமரன்...
    //பலருக்கு
    உண்மையான விருட்சத்தின் விடுகதை...
    சிலருக்கு
    வசந்தத்தின் வழி சுவாசம்...

    வாழ்த்துக்கள்//

    நன்றி..
    வாழ்வு நிறைய கற்றுக்கொடுத்து விட்டது போல....

    ReplyDelete
  7. @ அஹமது இர்ஷாத்....
    நன்றி...

    ReplyDelete
  8. அது தெரியாம தானே தாயி நாங்களே சுத்திகினுருக்குறோம்.... எங்க கிட்ட போயி ...

    ReplyDelete
  9. வாழ்வியலை படம் பிடிக்கும் கவிதைக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  10. @ தருமி...
    ///அது தெரியாம தானே தாயி நாங்களே சுத்திகினுருக்குறோம்.... எங்க கிட்ட போயி ...///

    ஓ... நீங்க அவரா....???? அப்போ எங்க பக்கம் வந்துடுங்க...

    ReplyDelete
  11. @ கருணாகரசு....
    ரொம்ப நன்றி....

    ReplyDelete
  12. வாழ்வு என்றால் வாய்ப்பு-ஆம்
    வாழ்வதற்காக ஒரு வாய்ப்பு!

    நல்ல தமிழில் கவிதை!
    நன்றிகள்!

    ReplyDelete
  13. @ vinu....
    அது தெரியாம தானே நாங்களே அலையுறோம்.... எங்ககிட்டேவா....

    ReplyDelete
  14. @ அண்ணாமலை....
    ///வாழ்வு என்றால் வாய்ப்பு-ஆம்
    வாழ்வதற்காக ஒரு வாய்ப்பு!

    நல்ல தமிழில் கவிதை!
    நன்றிகள்!///

    வாய்ப்புக்கள் வாழ வைத்தால் சரி... ஆனால் வீழவைத்தால்.......????????

    வருகைக்கு நன்றி....

    ReplyDelete
  15. இந்தக்கவிதையில் கேள்விகள் இருக்கு,கவிதை ரசனை கம்மியா இருக்கு.ஆதங்கம் இருக்கு.நல்ல முயற்சி

    ReplyDelete
  16. @ செந்தில்குமார்.....
    வருகைக்கு நன்றிங்க...

    ReplyDelete
  17. வாழ்வுக்கு ஒரு அர்த்தமும் இல்லை ...........
    வாழ்வே அர்த்தம் .......

    ReplyDelete
  18. @ தனி காட்டு ராஜா....
    /// வாழ்வுக்கு ஒரு அர்த்தமும் இல்லை ...........
    வாழ்வே அர்த்தம் .......///

    அதான்ங்க புரியல்ல......

    ReplyDelete