Saturday, July 31, 2010

எரியும் இதயம்.....!!!!!!!!!



பத்திரண்டு வருடங்கள்
பத்திரமாய் காத்த
பதுமையான என் இதயத்தை
பத்தே நொடிகளில்
உனக்குள் இடம்மாற்றியவன்
நீ........

பவித்திரமாய் உள்ளிருந்த
பாசம் முழுவதையும்
பதமாய் உனக்களித்த
பேதை நான்........

பத்திரப்படுத்த தெரியாமல்
உடைத்துவிட்டாய் - என்
கண்ணாடி இதயத்தை...
உன் சுயத்துக்காக
என் சுயத்தை கொன்றுவிட்டாய்.....

இத்தனையும் தெரிந்தும்
சிதறிய இதய சில்லுகள் ஒவ்வொன்றிலும்
உன் புன்னகை முகம் தெரிவதுதான்
வேடிக்கை........

என்
கண்கள் வடிக்கும்
கண்ணீர் துளிகள் நிலத்தில் விழும்
வரிவடிவம் - உன்னுருவம்.....

காதல் இல்லையென்றாலும்
இப்போதும் நாம் காதலர்களாம்....
வேடிக்கையாயில்லை...
என்னையறியாமலேயே எனைப்பார்த்து
கேலியாய் சிரிக்கிறது
என் இதயம்
எரியும் என் இதயம்..........!!!!!!!!!!!!

14 comments:

  1. என்
    கண்கள் வடிக்கும்
    கண்ணீர் துளிகள் நிலத்தில் விழும்
    வரிவடிவம் - உன்னுருவம்.....

    //

    அருமையான வரிகள்..

    இதயத்தின் வலியை இதமாய் சொல்லப்பட்டிருக்கிறது..

    ReplyDelete
  2. இதுக்குதான் சட்டுன்னு சரி சொல்ல கூடாது.....
    சரியான ஆளா பார்த்து இதயத்த இடம் மாற்றணும்.

    கவிதை அழகு.

    ReplyDelete
  3. //சிதறிய இதய சில்லுகள் ஒவ்வொன்றிலும்
    உன் புன்னகை முகம் தெரிவதுதான்
    வேடிக்கை........//
    அழகான வரிகள்.
    காதலின் வலியை அற்புதமாக சொல்லியிருக்கீங்க!

    ReplyDelete
  4. @ வெறும்பய...
    ///அருமையான வரிகள்..

    இதயத்தின் வலியை இதமாய் சொல்லப்பட்டிருக்கிறது.. ///

    நன்றிங்க.....

    ReplyDelete
  5. @ கருணாகரசு...
    ///இதுக்குதான் சட்டுன்னு சரி சொல்ல கூடாது.....
    சரியான ஆளா பார்த்து இதயத்த இடம் மாற்றணும்.

    கவிதை அழகு. ///

    ஐயைய்யோ... இது கற்பனை கவிதைங்க...
    நன்றிங்க....

    ReplyDelete
  6. @ balaji....
    @ சிவசங்கர்....
    @ karthick...

    நன்றிங்ககககககககக.....

    ReplyDelete
  7. நல்ல கற்பனை
    அரசியார் எப்பயும் கவனமா இருக்க வேணாமா ??

    ReplyDelete
  8. அம்மணி, நெசத்துல பல்பு வாங்கியிருக்கீகளா, வலி அதிகமாத் தெரிஞ்சா மாதிரி இருக்கு..

    ReplyDelete
  9. @ மங்குனி அமைசர்.....
    /// நல்ல கற்பனை
    அரசியார் எப்பயும் கவனமா இருக்க வேணாமா ??///

    நம்ம எப்பவும் கவனம் தானுங்கோ... அரசின்னா சும்மாவா...
    நன்றிங்கோ.....

    ReplyDelete
  10. @ jey....
    ///அம்மணி, நெசத்துல பல்பு வாங்கியிருக்கீகளா, வலி அதிகமாத் தெரிஞ்சா மாதிரி இருக்கு..///

    நாங்கள்ளாம் பல்பு வாங்காட்டியும் வாங்கின மாதிரியே நடிப்போம்ல.....

    ReplyDelete
  11. வலி நிறைந்த கவிதை..

    ReplyDelete
  12. @ சௌந்தர்....

    ம்ம்ம்ம்.... நன்றி....

    ReplyDelete